Posts

Showing posts from December, 2022

Seyam - இனிப்பு சீயம்

Ingredients  பாசிப்பருப்பு.         - 1 கிண்ணம் சர்க்கரை(சீனி).     - 3/4 கிண்ணம் தேங்காப்பூ.           - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்               - 1/4 டீஸ்பூன் பச்சிசி                   - 1/2 கிண்ணம் உளுத்தம் பருப்பு   - 1/4 கிண்ணம் வெல்லம்/சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை பாசிப்பருப்பை ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.  பச்சரிசியையும் உளுத்தம் பருப்பையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் மை போல கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.  ஊறிய பாசிப்பருப்பை தண்ணீரை வடித்துவிட்டு ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்கவும்.  பாசிப் பருப்பை நன்கு மலர (அ) மசிய வேக வைக்க வேண்டும். இதற்கு அரை மணி நேரமாகும்(கீழே உள்ள பாத்திரத்தில் அரை மணிக்கு  தேவைப்படும் நாலு டம்ளர் தண்ணீரை வைத்து  கவனமுடன் பார்ததுக் கொள்ளவும். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இட்லி பாத்திரத்தை திறந்து பார்த்து பாசிப்பருப்பு மீது  தண்ணீர் தெளித்து தெளித்து வேக வைக்கவும்.  பருப்பு வெந்த பிறகு அடுப்பில் ஒரு இருப்பு சட்டியை வைத்து ஒரு டேபிள் ஸபூன் நெய் சேர்த்து நெய்உருகியதும் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பாசிப் பருப்பு  மற