கம்பு ராகி ஓட்ஸ் ரொட்டி


தேவையான பொருட்கள்
ஓட்ஸ்                                           -  ஒரு கிண்ணம்
கம்பு மாவு(Bajra flour)/               -  ½ கிண்ணம்
ராகி மாவு/ சிவப்பு அரிசி மாவு or
சோள மாவு(Jower flour)
வெங்காயம்.                                  - சிறிதளவு
பச்சை மிளகாய்                            - 1
கொத்தமல்லி தழை.                     - சிறிதளவு
சீரகம்                                             - ஒரு தேக்கரண்டி
உப்பு                                              - தேவையான அளவு

செய்முறை
மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு  தோசை கல்லில் சிறிய சிறிய ரொட்டிகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் மறுபுறமும் திருப்பி வேக விட்டு எடுக்கவும். இதனை காலை உணவாகவோ அல்லது சாயங்கால சிற்றுண்டியாகவோ தக்காளி துவையலுடன் சாப்பிடலாம்

குறிப்பு - வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லிதழையை சேர்க்காமலும் செய்யலாம்.
 
ஓட்ஸை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். 

ஓட்ஸுடன் கம்பு மாவு, ராகி மாவு தலா கால் கப் சேர்த்தும் செய்யலாம் அல்லது இரண்டில் ஏதேனும்  ஒன்றை அரை கப் அளவு சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அரிசி மாவு அல்லது சோள மாவையும் ஒட்ஸுவுடன் சேர்த்து தோசையாக வார்க்கலாம். சுவையான டிபன் ரெடி! 

Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை காய்கறி அடை

White Kurma/திரக்கல்

Tandoori Mushroom/Mushroom 65