முட்டை இல்லாத ஆப்பிள் கேக்

தேவையான பொருட்கள்
ஆப்பிள்     - இரண்டு(medium) (அ) மூன்று சிறியது
மைதா      - ஒரு கப்
சர்க்கரை  - ¾ கப்
எண்ணெய் - ⅓ கப்
உப்பு - ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பட்டைத்தூள்(cinnamon) - ¼ டீஸ்பூன்
Nutmeg powder - ⅛ டீஸ்பூன்

செய் முறை
முதலில் ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக வைத்து ஆற விடவும். ஆறிய பிறகு வெந்த ஆப்பிள் துண்டங்களை நன்றாக மசித்துக்கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் சோடா, உப்பு, பட்டைத்தூள், Nutmeg, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மசித்த ஆப்பிள் பழக்கூழையும் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அதன்பிறகு ஒரு பேக்கிங் ட்ரேவில் வெண்ணெய் தடவி (அ) ப்ராச்மெண்ட் பேப்பரினை வைத்து கலவையை அதில் சேர்த்து  350டிகிரி F* இருபது முதல் முப்பது நிமிடம் பேக் செய்து
ஸ்பூன் (அ) முள் கரண்டியினால் கேக்கினை இருபது நிமிடமானதும் குத்தி பார்க்கவும். கலவை அதில் ஒட்டாமல் வரவேண்டும். அப்படி ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி. ட்ரேயை அவனை அணைத்து வெளியே எடுத்து ஆறவிடவும். நன்றாக ஆறிய பிறகு அதனை துண்டுகளாக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை காய்கறி அடை

White Kurma/திரக்கல்

Tandoori Mushroom/Mushroom 65