ப்ராக்கோலி சப்பாத்தி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கிண்ணம்
ப்ராக்கோலி - 1 பெரிய பூ (அ) 2 சிறிய பூக்கள்
சீரகத்தூள் - சிறிது(2 டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
முதலில் ப்ராக்கோலியை சிறிய பூக்களாக எடுத்துக் கழுவிக்(சுத்தம்)கொள்ளவும். பிறகு அதனை chopper-ல் இட்டு மிகவும் நன்றாக தூளாக்கிக் கொண்டு அதனை மைக்ரோ அவனில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். பிறகு அதை மேற்கூறிய பொருட்களுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மீதும் சிறிதளவு எண்ணெய் தடவிவிட்டு எடுக்கலாம். இந்த முறையில் செய்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்.
Comments
Post a Comment