Posts

ப்ராக்கோலி சப்பாத்தி

Image
ப்ராக்கோலி சப்பாத்தி தேவையான பொருட்கள் கோதுமை மாவு  - 2 கிண்ணம் ப்ராக்கோலி       - 1 பெரிய பூ (அ) 2 சிறிய பூக்கள் சீரகத்தூள்         - சிறிது(2 டீஸ்பூன்) உப்பு                  - தேவையான அளவு தண்ணீர்             -தேவையான அளவு எண்ணெய்          - 4 டேபிள் ஸ்பூன் முதலில் ப்ராக்கோலியை சிறிய பூக்களாக எடுத்துக் கழுவிக்(சுத்தம்)கொள்ளவும். பிறகு அதனை chopper-ல் இட்டு மிகவும் நன்றாக தூளாக்கிக் கொண்டு அதனை மைக்ரோ அவனில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். பிறகு அதை மேற்கூறிய பொருட்களுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து  வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மீதும் சிறிதளவு எண்ணெய் தடவிவிட்டு எடுக்கலாம். இந்த முறையில் செய்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்.

கம்பு ராகி ஓட்ஸ் ரொட்டி

தேவையான பொருட்கள் ஓட்ஸ்  -  ஒரு கிண்ணம் கம்பு மாவு(பஜ்ரி flour)/-  ½ கிண்ணம் ராகி மாவு வெங்காயம் - சிறிதளவு பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி தழை - சிறிதளவு சீரகம் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு  தோசை கல்லில் சிறிய சிறிய ரொட்டிகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் மறுபுறமும் திருப்பி வேக விட்டு எடுக்கவும். இதனை காலை உணவாகவோ அல்லது சாயங்கால சிற்றுண்டியாகவோ தக்காளி துவையலுடன் சாப்பிடலாம் குறிப்பு - வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லிதழையை சேர்க்காமலும் செய்யலாம். ஓட்ஸுடன் கம்பு மாவு, ராகி மாவு தலா கால் கப் சேர்த்தும் செய்யலாம் அல்லது இரண்டில் ஏதேனும்  ஒன்றை அரை கப் அளவு சேர்த்தும் செய்யலாம்.

சௌசௌ முட்டை பொரியல்

சௌசௌ முட்டை பொரியல் தேவையான பொருட்கள் சௌசௌ(சீமை கத்திரிக்காய்)      - ஒன்று வெங்காயம்                                    -சிறிதளவு பச்சைமிளகாய்                               - ஒன்று மிளகு சீரகத்தூள்                            - ஒரு தேக்கரண்டி முட்டை                                          - 2 (அ) 3 உப்பு                                              - தேவையானளவு செய்முறை சௌசௌவை துருவிக்கொண்டு, வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை அரிந்து கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் பச்சைமிளகாயை சேர்த்து வதங்கிய பிறகு சௌசௌவை சேர்த்து சிறிது வதங்கியதும் சிறிது உப்பு மற்றும் மிளகு சீரகத்தூளும் சேர்த்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டால், சுவையான சௌசௌ முட்டை பொரியல் ரெடி. இதனை முட்டை தோசைகளாகவும் செய்யலாம்.

கறிவேப்பிலை காய்கறி அடை

கறிவேப்பிலை காய்கறி அடை ப்ரவுன்(Brown) அரிசி            - ஒரு கிண்ணம் துவரம் பருப்பு                        - அரை கிண்ணம் கடலை பருப்பு                      - 2 (அ) 4 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை                       - 10 (அ) 20 ஈர்க்குகள்(strips) வரமிளகாய்                            - 5 (அ) 7 சோம்பு & சீரகம்                    - தலா ஒரு டீஸ்பூன் கேரட்                                     - ஒன்று முட்டைகோசு                        - அரை கிண்ணம் வெங்காயம்                            - சிறியது ஒன்று உப்பு                                       - தேவையான அளவு மஞ்சள்தூள், மற்றும்              - கால் டீஸ்பூன் பெருங்காயம்                         - 1/8 டீஸ்பூன் செய்முறை முதலில் ப்ரவுன் அரிசியையும் பருப்புகளையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். வரமிளகாய், சோம்பு  மற்றும், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மாவுடன் சேர்க்கவும். மேலே குறிப்பிட்டுள்ள  காய்கறிகளையும் துருவிக்கொண்டு மாவுடன்  சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் ம