சோள குழிப்பணியாரம்

வெள்ளை சோளம்     - 1 கிண்ணம்

இட்லி அரிசி. - 1 கிண்ணம்

பச்சரிசி        - 1 கிண்ணம் 

Brown rice  - 1 கிண்ணம்(optional)

உளுந்து   - 1/2 கிண்ணம்

உப்பு  - ஒரு டேபிள் ஸ்பூன் 

வெங்காயம்    -   ஓன்று

பச்சை மிளகாய்    -  மூன்று

கொத்தமல்லி தழை  - ஒரு கைப்பிடி

Instructions 

சோளத்தை 6 அல்லது 7 மணி நேரம் ஊற வைக்கவும்  அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவிடவும். நான் முதலில் உளுந்தை நன்றாக நைசாக அரைத்து எடுத்துக் கொள்வேன். பிறகு ஊறிய சோளம் அரிசிகளை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அரைத்த அரிசி சோள மாவுடன் உளுந்தையும் தேவையான உப்பையும் சேர்த்து அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

இந்த அரைத்த மாவை 5 மணி நேரம் வைத்து லைட்டாக புளிக்க வைத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து கொண்டு நறுக்கிய  வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கி கொண்டு இதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

அடுப்பில் குழிபணியாரக்கல்லை வைத்து அதில் மாவை சிறிது சிறிதாக ஊற்றி ஒருபுறம் நன்றாக வெந்ததும் திருப்பி விட்டு மறுபுறமும் வேக விட்டு எடுத்தால் பணியாரம் ரெடி. மிகவும் சுவையாக இருக்கும். 

தேங்காய் சட்னி அல்லது தக்காளி மிளகாய்  சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Brown rice இல்லையென்றால் இட்லி அரிசியை 2 கிண்ணமாக எடுத்துக் கொள்ளவும்.


Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை காய்கறி அடை

Tandoori Mushroom/Mushroom 65

Simple Mushroom Pulav/ மஷ்ரூம் புலாவ்